2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

8 வயது சிறுமி மாரடைப்பால் வகுப்பறையில் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜனவரி 08 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

3ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர்,  பதனகுப்பே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை பகுதியில் உள்ள  தனியார் பாடசாலையில் 3ஆம் தரத்தில் பயிலும் குறித்தசிறுமி, திங்கட்கிழமை (6) காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். 

இதையடுத்து, ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

8 வயதேயான‌ மாணவி தேஜஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், பதனகுப்பேவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X