2025 ஜூலை 19, சனிக்கிழமை

80 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள பாட்டி

Freelancer   / 2023 ஜூன் 19 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் கையில் ஊன்று கோல் துணையுடன் நடத்துவரும் 80 வயது மூதாட்டி தனது 12 ம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளார்.

நேபாளத்தின் ராமேச்சாப் பகுதியை சேர்ந்த ரத்னகுமாரி என்ற மூதாட்டியே இவ்வாறு தேர்வு எழுதவுள்ளார்.

தனது சிறுவயதில் விவசாயம் செய்வதற்கே நேரம் சரியாக இருந்ததாகவும் அப்போது தன்னால் கல்வியை தொடர முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தனக்கு மீண்டும் படிப்பதற்கான எண்ணம் தோன்றியதாகவும் அதனால் முதியோர்களுக்கான வகுப்பில் தான் சென்று படித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பகுதியில் 10 ம் வகுப்புக்கான பரீட்சையை எழுதியதாகவும் தற்போது 12ம் வகுப்பு தேர்வை எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை எனவும் மூதாட்டி மேலும் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X