2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

(Phone pay) மூலம் பிச்சை கேட்கும் யாசகர்

Mayu   / 2024 மார்ச் 27 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கற்பனை செய்து பார்க்காத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. வீட்டை விட்டு வெளியே ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் உணவு பொருள் முதல் ஆடை ஆபரணங்கள் வரை வாங்கிவிடலாம். ஒரு காலத்தில் கால் கடுக்க நடந்து வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை வேறு ஒருவருக்கு அனுப்பி வைத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

அதேபோல் அலைபேசியில்  சில வினாடிகளில் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பிவிட முடிகிறது. அதேபோல, பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரை தற்போது கூகுள் பே (google pay), போன் பே (Phone pay) போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை செய்து முடித்துவிடலாம். கல்யாண வீட்டில் மொய் வாங்கக் கூட கூகுள் பே ஸ்கேனர் (google pay scanner) வைக்கும் சம்பவங்கள் தற்போது பெருகிவிட்டது. இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும்தான்

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை யூஸ் பண்ணலன்னு பேச்சு வாக்கில் சொல்வதுண்டு.. இனி அதையும் சொல்ல முடியாது எனக் கூறும் வகையில், பிச்சைக்காரர் ஒருவர் போன்பே (Phone pay) மூலமாக பிச்சை எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கமைய, இந்தியாவில் கவுகாத்தியில் போன்பே பயன்படுத்தி பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுக்கும் காட்சி இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சிந்தனையை தூண்டும் தருணம் என அசாம் காங்கிரஸ் கட்சி நிர்வாகி இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் பிச்சை எடுக்கும் பார்வையற்ற நபர் ஒருவர், போன்பே (Phone pay) மூலமாக உதவி கேட்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தஷ்ரத் என்ற அந்த நபர், தனது கழுத்தில் போன் பே ஸ்கேனரை கழுத்தில் தொங்கவிட்ட படி, சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் யாசகம் கேட்கிறார்.

ஒரு வாகன ஓட்டியும் போன்பே மூலமாக ரூ.10 ஐ அவருக்கு கொடுக்கிறார். காங்கிரஸ் கட்சியின் கவுரவ் சோமானி இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .