2026 மார்ச் 07, சனிக்கிழமை

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுகிறது தே.மு.தி.க

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 09 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுகிறது என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளது.

 இரண்டாம்  கட்ட பேச்சுவார்த்தைக்கு அ.தி.மு.க. அழைத்தபோது தே.மு.தி.க. செல்லவில்லை. அதனால், அ.தி.மு.க. 28 தொகுதிகள் என்பதையும் வெகுவாக குறைத்தது. இந்த நேரத்தில், தே.மு.தி.க. 25 தொகுதிகள் கேட்டது. ஆனால், அ.தி.மு.க., தே.மு.தி.க.வை அதிர்ச்சியடைய செய்யும் வகையில், 15 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று  கூறிவிட்டது.

இதனால், சற்று யோசித்த தே.மு.தி.க., பா.ம.க.வுக்கு வழங்கியதுபோல, 23 தொகுதிகளையாவது தாருங்கள் என்று அ.தி.மு.க.விடம் கேட்டது. இந்த கோரிக்கையுடன் நேற்று முன்தினம் இரவு தே.மு.தி.மு.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார். ஆனால், அ.தி.மு.க. தரப்பிலோ, 13 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தருவதாக சொல்லப்பட்டது. “நாமும் எவ்வளவுதான் இறங்கிவந்தாலும், அ.தி.மு.க.வும் பின்னால் செல்கிறதே” என்று தே.மு.தி.க. அதிருப்தி அடைந்தது.இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை அவசர ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .