2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு சீல் வைப்பு

Freelancer   / 2022 ஜூலை 11 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க.இ) தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 

அ.தி.மு.க.இ பொதுக்குழு கூட்டம்  இன்று (11) காலை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம்  (ஓபிஎஸ்) பொதுக்குழு கூட்டத்திற்குச் செல்லாமல் தலைமைக் கழகத்திற்குப் சென்றார். 

ஓபிஎஸ் வாகனம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வந்தபோது எடப்பாடி பழனிசாமி ( ஈபிஎஸ்) ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை முன்னேறவிடாமல் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. 

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழக அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ் உள்ளே வர வழி செய்தனர்.  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழகத்தை சுற்றிவைக்கப்பட்டிருந்த ஈபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்தனர். தலைமைக் கழகத்தின் அனைத்து கதவுகளையும் அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், அங்கு விரைந்த  வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க தலைமை  அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X