2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

அ.தி.மு.க பொதுக்குழுக்கூட்டம்; இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கள் இழுபறி

Freelancer   / 2022 ஜூன் 26 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க) பொதுக்குழு கூட்டத்தை, ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 11ம் திகதி நடத்துவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் அக்கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்)  தரப்பினர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் கடந்த ஜூன் 14 ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது.

அப்போதுமுதல் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்தது. இரட்டை தலைமைதான் வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்திவருகின்றது. 

இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை என்பதில் இபிஎஸ் தரப்பும் உறுதியாக உள்ளன. எனினும், இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எம்ஜிஆர் காலத்து மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோரின் சமரச முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த முயற்சிகள் யாவும் தோல்வி அடைந்தன.

பொதுக்குழுவிலாவது தீர்வு கிடைக்கும் என்று தொண்டர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் 23ஆம் திகதி அதிகாலை வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் விடிய விடிய நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .