Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூலை 23 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாத் தொற்றுக்குப் பயந்து, 15 மாதங்களாக வீட்டுக்குள்ளே ஒரு குடும்பம் முடங்கிக் கிடந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கோதாவரி மாவட்டம், கடாலி கிராமத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொண்ட மேற்படி குடும்பத்தினரே இவ்வாறு வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தவர்களாவர்.
இக்குடும்பத்தில் 50 வயது தந்தையும், 45 வயது தாயும் முறையே 32,30 வயதான மகள்களும், 29 வயது மகனும் வாழ்ந்து வந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் அயலவர்கள் எவருடனும் பேச்சுவார்த்தைகள் இன்றி வீட்டின் கதவைக் கூடத்திறக்காமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
எனினும் மகன் மாத்திரம் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய அவ்வப்போது வெளியே சென்று வந்துள்ளார். இந்நிலையில், குறித்த குடும்பத்தவர்களுக்கு முதல்வரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அவ்வீட்டுக்குச் சென்ற உத்தியோகத்தர்கள் விடயத்ததைத் தெரியப்படுத்தி அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டுத் தருமாறும் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாது என திட்டவட்டமாகக் கூறிக் கதவைத் திறக்க மறுத்து விட்டனர்.
இந்நிலையில் அயலவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது வீட்டுக்குள்ளேயே முடங்கிய 5 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வலுக்கட்டாயமாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
15 minute ago
41 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
3 hours ago
3 hours ago