Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
போப் பிரான்சிஸ் காலமடைந்துள்ள நிலையில் புதிய போப் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
புதிய போப் தேர்வு செய்யும் கார்டினல் காலேஜில் இந்தியாவை சேர்ந்த 4 பேரும் உள்ளனர். இதில் கோவா-டாமன் பேராயரான பிலிப்பி நேரி பெரேரா (வயது 72) முக்கியமானவர். இவர் தற்போது இந்திய பிஷப் மாநாடு மற்றும் ஆசிய பிஷப் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.
அடுத்ததாக, திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட சீறோ மலங்கரா கத்தோலிக்க சபையை சேர்ந்த பசேலியோஸ் கிளீமிஸ் (வயது 64) உள்ளார். 2001ஆம் ஆண்டு பிஷப்பாக நியமிக்கப்பட்ட இவர், 2012ஆம் ஆண்டு முதல் கர்தினாலாக உள்ளார்.
இதைப்போல, ஐதராபாத் பேராயர் அந்தோணி பூலாவும் (வயது 63) இந்திய கர்தினால்களில் முக்கியமானவராக உள்ளார். இவர் இந்தியாவின் முதல் தலித் கர்தினால் என்பது கவனிக்கத்தக்கது.
இறுதியாக கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடும் (வயது 51) இந்த பட்டியலில் உள்ளார். போப் பிரான்சிசின் வெளிநாட்டு பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்த இவர், இளம் கார்டினல்களில் ஒருவராக உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago