2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அடுத்த வாரம் சென்னை திரும்பவுள்ளார் ரஜினி

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 01 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

அமெரிக்காவில் சிகிச்சையை முடித்து, ஓய்வில் உள்ள நடிகர் ரஜினி காந்த், அடுத்த வாரம் சென்னை திரும்பவுள்ளார். 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினி, மத்திய அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியோடு, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சையின் போது எடுத்த படங்கள், 'டுவிட்டரில்' வெளியாகின. தற்போது, சிகிச்சை முடித்து ஓய்வில் உள்ள ரஜினி, நண்பர்கள் குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் பொழுதுபோக்கி வருகிறார். இம்மாதம் இரண்டாவது வாரம் நடிகர் ரஜினி காந்த், சென்னை திரும்புவார் என தெரிகிறது.

இதற்கிடையே, ரஜினி விஷயத்தில், நாரதர் கலகம் செய்ததாக கூறிய நடிகை கஸ்தூரி, 'பதில் கிடைத்தது. நல்ல விஷயம் காத்திருக்கிறது. தலைவரை வரவேற்க, தமிழகம் தயாராகட்டும்' என, டுவிட்டரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து, ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் கூறுகையில், ''தலைவரோ, குடும்பத்தைச் சேர்ந்தவரோ யாரும் பேசவில்லை. கஸ்தூரிக்கு எந்தவிதமான விளக்கமும் தரவில்லை என்பதே நிஜம்,'' என்றார். இதற்கு கஸ்தூரி, ''என்னிடம் பேசியது, கங்கைஅமரன் தான். அவர் கூறியதை, நான் யாரிடமும் சரிபார்க்க வேண்டும் என நினைக்கவில்லை,'' என, பதில் அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X