Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் .
30 வயதான இவர் இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்மையில் வெங்கடேஷ் மது அருந்துவதற்கு தன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். எனினும் அவரது மனைவி அவருக்கு பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை பிடித்து தலையில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jul 2025