2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அதற்கு மறுத்த தந்தை; கொலை செய்த மகன்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெல்லியில் போதைப்பொருள் வாங்குவதற்கு  பணம் தர மறுத்த தந்தையை, மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு டெல்லியின் சுபாஷ் பிளேஸ் பகுதியிலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவ  தினத்தன்று, போதைப் பொருளுக்கு அடிமையான அஜெய் என்ற இளைஞர் தனது தந்தை சுரேஷிடம் போதைப் பொருள் வாங்குவதற்கு பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளார்.

எனினும் சுரேஷ் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையில்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 இதில் ஆத்திரமடைந்த அஜெய் தனது தந்தையைக்  கட்டையால் அடித்துக் கொலைசெய்துள்ளார் .

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்  அஜெய்யைக் கைது செய்துள்ளனர். அத்துடன் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .