2026 மே 09, சனிக்கிழமை

dd

அதிமுக – பாஜக பேச்சுவார்த்தையில் சிக்கல்?

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 02 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி  கேட்பதால் அண்ணா திராவிட முன்னேற்ற கழக   கூட்டணியில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுகவால், பாஜக, தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியவில்லை.

சென்னை கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த 2016 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 5.32 சதவீத வாக்குகளைப் பெற்ற பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம். 2016இல் 2.84 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள பாஜகவுக்கு 20தொகுதிகள் தருகிறோம் என்று முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் கூறியுள்ளனர். வாக்குச் சதவீதம் குறைவாக இருந்தாலும் பாஜக மத்தியில் தனித்து ஆட்சி செய்யும் கட்சி. கடந்த 4 ஆண்டுகள் அதிமுக அரசு நீடித்ததற்கு யார் காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள். பாஜகவுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. கடந்த 2016இல் தனித்து போட்டியிட்டு நாங்கள் அதிக வாக்குகளைப் பெற்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷாவும், சந்தோஷும் கூறியுள்ளனர். அப்போது ஒரு பட்டியலையும் பாஜக அளித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .