A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
பல சோதனை, வேதனைகளை தாண்டி, அதிமுகவை கோட்டையாக மாற்றியவர் புரட்சி தலைவி ஜெயலலிதாவென துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் இன்று கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழ்நாட்டின் அரசியல், நேற்று இன்று நாளை என எப்போதுமே புரட்சி தலைவர் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். மக்களுக்காக பல திட்டங்களைக் கொடுத்து அசைக்க முடியாத தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை.
தொண்டனின் உழைப்பு, சிந்திய இரத்தம் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அம்மாவின் கனவை நனவாக்கும் விதமாக, 2023க்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
29 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
07 Mar 2026