2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை நிலையத்திற்குத் தீ வைத்த இளைஞர்

Ilango Bharathy   / 2023 மார்ச் 06 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் திருப்புணித்துரா பகுதியைச்  சேர்ந்த ராஜேஷ். இவர் ”அதிஷ்ட இலாபச் சீட்டுகள் விற்கும் கடைகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை  விற்கும் வியாபாரிகள் செல்வத்தில் கொழிப்பதாகவும் இது தடுக்கப்பட வேண்டும்” என்றும்  தெரிவித்து அண்மையில்  முக நூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் .

மேலும்  குறித்த வீடியோவின் இறுதியில்  அப்பகுதியில் உள்ள அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை நிலையமொன்றுக்குத் தான்    தீவைக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர்  கூறிய படியே  பெற்றோலுடன் குறித்த அதிஷ்ட இலாபச்  சீட்டுக் கடைக்குச் சென்றிருந்த அவர், அக்கடைக்குத் தீ வைத்துள்ளார்.

இதில் குறித்த  கடையில் இருந்த அதிஷ்ட இலாபச் சீட்டுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்த விசாரணையைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .