2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அந்தரங்க உறுப்பை தொட்டுத் தாக்கினார் ”; கிரிக்கெட் வீரர் மீது நடிகை புகார்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 23 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் ஒரு நட்சத்திர விடுதியில் தனது நண்பர்களுடன் உணவு அருந்திக்கொண்டு  இருந்தபோது இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ‘ஸ்வப்னா கில்‘ அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த ‘ஸ்வப்னா கில்‘ தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்விஷாவை கடுமையாகத்  தாக்கினார்.

மேலும், பிரித்வி ஷாவின் காரையும் அந்த கும்பல் அடித்து உடைத்தது. இச்சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்வப்னா கில் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன் தாக்குதல் நடத்திய ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் அண்மையில் பிணையில் வெளியே வந்த ஸ்வப்னா கில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது புகார் அளித்தார்.

அதில் ”சம்பவ தினத்தன்று  பிருத்வி ஷா  குடிபோதையில் இருந்ததாகவும்,  தனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டுத் தன்னை அவர் தாக்கியதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து ஆயுதங்கள் மூலம் தாக்கியமை, உயிருக்கு ஆபத்தை விளைவித்தமை எனப்  10 பிரிவுகளின் கீழ் பிருத்வி ஷா மீது ‘ ஸ்வப்னா கில்‘ பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .