Freelancer / 2024 செப்டெம்பர் 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

‘ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானிக்கு செபி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அண்மையில், முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்தது.
அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 இலட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (செப்.,24) ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் இயக்குனர்களின் முடிவுக்கு மாறாக நிறுவன கடன்களுக்கு ஒப்புதல் அளித்த புகாரில், தொழில் அதிபர் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து செபி அமைப்பு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
ரூ.1 கோடி அபராதத்தை 45 நாட்களுக்குள் ஜெய் அன்மோல் அம்பானி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.S
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago