2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அனுமான் அருகே பிகினி

Ilango Bharathy   / 2023 மார்ச் 08 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் அங்குள்ள `ரத்லமில்` பகுதியில்  அண்மையில் 13 ஆவது ஜூனியர் பொடி பில்டிங் சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்திய  பொடிபில்டிங் சம்மேளனத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் போட்டி நிகழ்ச்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து சுமார்  400க்கும் மேற்பட்ட பொடி பில்டர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 இந்நிலையில்  குறித்த போட்டியின்போது மேடையில் அனுமான் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில்  அதன் அருகே பிகினி உடை  அணிந்த இளம் பெண் பொடி பில்டர்கள் தங்கள் தடகள உடலை முறுக்கி காட்டும் வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.  

இதனையடுத்து பொடி பில்டிங் போட்டியில், மேடையில் ஹனுமான் சிலை வைக்கப்பட்டமைக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்து  வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .