A.K.M. Ramzy / 2021 ஜனவரி 05 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்வரும் 14ஆம் திகதி சென்னை வருகிறார். அப்போது நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா, கடந்த நவம்பர் 21ஆம் திகதி சென்னை வந்தார். அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் அமித் ஷா முன்னிலையில் பேசிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர், ‘அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்" என்று அறிவித்தனர். ஆனால், கூட்டணி தொடர்பாக அமித் ஷா எதுவும் பேசவில்லை.
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று கடந்த டிசம்பர் 29ஆம் திகதி ரஜினி அறிவித்தார்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago