Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை, 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்டின் பரதநாட்டிய அரங்கேற்றம், மும்பையில் விமரிசையாக நடந்தது.
மும்பையில் 'என்கோர் ஹெல்த்கேர்' நிறுவனத்தின் தலைவரான விரேன் மெர்ச்சன்ட்; இவரது மனைவி ஷைலா மெர்ச்சன்ட். இவர்களின் மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் முகேஷ் அம்பானி - நீத்தா அம்பானி தம்பதியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இளம் தொழிலதிபராக உள்ள ராதிகா, கலைகள் மீது ஆர்வம் உள்ளவர். ராதிகா மெர்ச்சன்டின் பரதநாட்டிய அரங்கேற்றம், மும்பையில் உள்ள, 'ஜியோ வேர்ல்ட் சென்டர்' அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) நடந்தது.
மேலும், வருங்கால மருமகளின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு முகேஷ் - நீத்தா தம்பதியினர் நேரில் வந்து வாழ்த்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .