2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அரசியல் பிரமுகரை அடித்து விரட்டிய பொதுமக்கள்

Ilango Bharathy   / 2022 மே 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண வீடொன்றுக்குச் சென்ற எம்.எல்.ஏ வை பொதுமக்கள்
அடித்து விரட்டிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில், கோபாலபுரம் தொகுதியைச் சேர்ந்த தலரி வெங்கட்ராவ் என்ற
எம்.எல். ஏ தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரி மரண வீட்டிற்கு நேற்று
முன்தினம் சென்றுள்ளார்.



அப்போது அங்கு குவிந்த பொது மக்கள் எம்.எல்.ஏ வெங்கட்ராவைத் தடுத்து
நிறுத்தியதோடு குறித்த நபரின் மரணத்திற்கும் வெங்கட்ராவுக்கும் தொடர்பு
இருப்பதாகத் தெரிவித்து அவரை அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார், மக்களிடம் இருந்து
எம்.எல்.ஏ தலரி வெங்கட்ராவைப் பாதுகாப்பாக மீட்டு சென்றனர்.

இந்நிலையில் கிராம மக்கள் ஆளும் கட்சி எம்எல்ஏவை விரட்டி அடித்த சம்பவம்
ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .