2024 மே 17, வெள்ளிக்கிழமை

அழைப்பிதழில் எழுத்துப் பிழை

Mithuna   / 2024 ஜனவரி 07 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஜனவரி 22ஆம் திகதி நண்பகல் 12.20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமர் கோயில் அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் அட்டைகள், சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் அமைந்துள்ளன. இந்த அழைப்பிதழில் அயோத்தி ராமர் கோயிலின் படம், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் தொகுப்பில் அழைப்பிதழ் அட்டை, மூலவர் பிரதிஷ்டை நிகழ்ச்சி நிரல், ராமர் கோயில் இயக்கம் குறித்த கையேடு, ஸ்ரீ ராமரின் திருவுருவம், தலைமை வகிக்கும் விருந்தினர்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீராமஜென்பபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் எனவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் தற்போது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆங்கில அழைப்பிதழில், "Invitation" என்பதற்குப் பதிலாக எழுத்துப் பிழையோடு, "Invitaion" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் விழாவிற்கான அழைப்பிதழின் முகப்பிலேயே, எழுத்துப் பிழை இருப்பதை விழாக் குழுவினர் யாருமே கவனிக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .