Freelancer / 2024 ஜூலை 26 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ., நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2018ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பெங்களூர் வந்த ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த பெப்.,20ஆம் திகதி இந்த வழக்கில் ராகுல் காந்தி ஆஜராகி இருந்த நிலையில், அவர் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று (26) மீண்டும் ஆஜரான நிலையில், விசாரணைக்கு பிறகு வழக்கு வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.S
21 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
2 hours ago