2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆங்கிலத்தில் 350 கவிதை புத்தகங்களை எழுதி வெளியிட்ட தமிழ் மாணவி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தலைவர்கள் குறித்து ஆங்கிலத்தில் 350-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதி புத்தகமாக வெளியிட்ட தமிழ் மாணவிக்கு பாராட்டுகள் மற்றும் விருதுகள் வாங்கி குவித்து வருகிறார்.


கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் நார்த் கில்பர்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் குரல்மி, ரேவதி தம்பதி. இவரது மகள் ஷாருலதா. சிறு வயது முதலே இவருக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம். இதனால் தமிழை முதல் மொழி பாடமாக எடுத்து படித்து வந்தார். இவர் தமிழ் மீது கொண்ட பற்றால், கவிதைகள் எழுத தொடங்கினார். இதற்கு பாராட்டுகளும் மாணவிக்கு குவிந்தது

இந்நிலையில் ஷாருலதாவை உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில மொழியில் கல்வி கற்கும் பாடத்திட்டத்தில் பெற்றோர்  சேர்த்தனர். சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள தூய மரியன்னை பள்ளியில் ஆங்கில மொழி வழி கல்வி பாடத்திட்டத்தில் படித்தார். இதையடுத்து ஷாருலதாவிற்கு தமிழ் மட்டுமின்றி ஆங்கில மொழியிலும் கவிதைகள் எழுதும் திறமையை வளர்த்தார்.

இதனால் ஆங்கில மொழியில் கவிதைகள் எழுதுவதில் அதிகளவு ஆர்வம் காட்டினார். 8-ம் வகுப்பில் முதன் முறையாக ஆங்கில மொழியில் சமூக சிந்தனை தொடர்பான கவிதைகளை எழுத தொடங்கினார். இவரது ஆங்கில திறனை பார்த்து மாவட்ட அளவில், சிறந்த ஆங்கில கவிஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டத்தை அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர்.

மேலும் ''கம் அவுட்'' என்ற பெயரில் ஆங்கில கவிதை புத்தகம் ஒன்றை எழுதினார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆங்கில பேராசிரியர்கள், இந்த புத்தகத்தை வெளியிட்டனர். இது ஷாருலதாவிற்கு கூடுதல் பெருமையை சேர்த்தது.

ஒரு தமிழ் மாணவி, ஆங்கிலத்தில் கவிதை எழுதி சாதித்திருப்பது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை அளிக்கும் வண்ணம் உள்ளது என்று பலரும் பெருமை பாராட்டி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X