Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 நவம்பர் 19 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிராவில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கொன்று மும்மை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனக் கூறி குறித்த சட்டப்பிரிவில் குற்றவாளி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து இந்திய தண்டனைச்சட்டம் 354ன்கீழ் அவரது தண்டனையை உறுதி செய்தது.
எனினும், போக்சோ சட்டம் மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இத் தீர்ப்பானது மக்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளானது.
இதனையடுத்து குறித்த தீர்ப்பை எதிர்த்து அட்டர்ஜி ஜெனரல் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்குகளின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் ”உடல் மீது சீண்டினால் மட்டுமே பாலியல் தொந்தரவு இல்லை, ஆடை மீது தொட்டு தொந்தரவு செய்வதும் பாலியல் குற்றமே. பாலியல் வன்கொடுமைக்கு பாலியல் நோக்கம் மட்டும்தான் மூலகாரணம் எனத் தெரிவித்து” போக்சோ சட்டம் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
13 minute ago
39 minute ago
42 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
42 minute ago
52 minute ago