2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆண்-பெண் உறுப்புகளுடன் அரிய மனிதர்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மஞ்சேரியலை சேர்ந்தவர் 40 வயது ஆண். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த போது அவருக்கு ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பு இருந்தது தெரியவந்தது.

அரிதான இதுபோன்ற நபர்களுக்கு கருப்பை இருக்கும் சிலருக்கு கருவில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். சில ஹார்மோன்கள் தாக்கத்தால் ஒன்று மட்டுமே எஞ்சி இருக்கும். அப்போது அவர் பிறப்பிலேயே ஆணா பெண்ணா என்பது முடிவு செய்ய முடியும்.

மரபணுக்களின் பிறழ்வு காரணமாக ஹார்மோன்கள் போதுமான அளவு வெளிப்படுவதில்லை. இது போன்ற அரிய வகை மனிதர்கள் உலகம் முழுவதிலும் 300 பேரும், இந்தியாவில் 20 பேரும் உள்ளனர். அத்தகைய மனிதர்கள் சாதாரணமாக தெரிவார்கள். தாடி மீசை இருக்கும். ஆண்குறி சாதாரணமாக இருக்கும். விந்து உற்பத்தி இருக்காது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

பரிசோதனைக்கு வந்த நபருக்கு டாக்டர்கள் லிப்ரோஸ் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஆண் உறுப்பை அகற்றி சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X