Freelancer / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் திருமணத்தன்று மணமேடையில் மணமகன் அமர்ந்திருக்க, சுற்றி அவரது நண்பர்கள், உற்றார் - உறவினர்கள் இருந்துள்ளனர். அப்போது அதே மணமேடையில் திடீரென ஆண் ஒருவர் ஏறினார். திருமண நிகழ்வில் அவரை சரியாக யாரும் கண்டிராத நிலையில், தனது கையில் மறைந்து வைத்திருந்த அசிட்டை மணமகன் மீது சட்டென்று வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தொடர்ந்து ஒரு கும்பல் மணமகனை காப்பற்ற முற்பட, மற்றொரு கும்பல் ஆசிட் வீசிய நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த அசிட் வீச்சால் மணமகன் மட்டுமின்றி அங்கிருந்த உறவினர்கள் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.
அந்த பெண்ணிடம் அசிட் வீச்சுக்கான காரணத்தை பொலிஸார் கேட்டபோது, மணமகனும், அந்தப்பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் திடீரென வீட்டில் பார்க்கும் பெண்ணை அவர் திருமணம் செய்ய எண்ணி, இந்த பெண்ணை தவிர்த்து வந்துள்ளார். இவர் எவ்வளவு கெஞ்சியும் அவர் கண்டுக்கவில்லை. அதனையடுத்தே ஆண் வேடமிட்டு காதலன் மீது ஆசிட் வீசியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

13 minute ago
24 minute ago
24 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
24 minute ago
38 minute ago