2025 ஜூலை 30, புதன்கிழமை

ஆண்களில் ஒரு பங்கினர் அசைவம் சாப்பிட்டதே இல்லை !!!

Freelancer   / 2022 மே 22 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், அசைவ உணவை எடுத்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த ஆறு வருடங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமும் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவு தான். வாரத்தில் ஒரு நாள் மட்டும் பலர் அசைவம் சாப்பிடுவார்கள். 

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தகவல்படி,  15 வயது முதல் 49 வயது வரை உள்ள ஆண்களில் ஒரு பங்கினர் அசைவத்தை சாப்பிட்டதே இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 ஜூன் 17இ 2019 முதல் ஏப்ரல் 30, 2021க்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீன்இ கோழி இறைச்சி, இறைச்சி ஆகியவை அசைவ உணவுகளாக ஆய்வுப் பட்டியலில் இருந்தன. 

2019-2021 காலகட்டத்தில், 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 29.4 சதவீதம் பேர் அசைவம் உட்கொண்டதில்லை என்று தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில், மொத்தம் 83.4 சதவீத ஆண்களும், 70.6 சதவீத பெண்களும், அசைவ உணவுகளை தினமும் அல்லது வாரந்தோறும் அல்லது எப்போதாவது  சாப்பிட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .