2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆனந்த் அம்பானியின் பாதயாத்திரை நிறைவு

Freelancer   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது 30 பிறந்தநாளையொட்டி துவாரகாதீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கான பாதயாத்திரையை குஜராத்தின் ஜாம் நகரில் இருந்து கடந்த மார்ச் 29ஆம் திகதி தொடங்கினார்.

அவரது 170 கிலோமீற்றர் நடைப் பயணம் 8 நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (6) நிறைவடைந்தது. அப்போது தன்னுடன் ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆனந்த் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

துவாரகாதீஸ்வரர் கோயிலில் பாதயாத்திரையை ஆனந்த் அம்பானி நிறைவு செய்த போது, அவரது மனைவி ராதிகா மெர்ச்செண்ட் மற்றும் தாயார் நீட்டா அம்பானி ஆகியோர் உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .