Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 11 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய பிரதேச மாநிலம் அம்பா பத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜாராம் யாதவ். இவரது இளைய மகன் ராஜாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
சிறுவனை மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் கிடைக்காததால், பூஜாராம் இறந்த சிறுவனின் உடலை மூத்த மகன் குல்சனிடம் ஒப்படைத்துவிட்டு, குறைந்த வாடகைக்கு வாகனம் தேடச் சென்றார்.
நேரு பூங்கா அருகாமையில் சாலையோரம் இறந்த சகோதரனின் உடலை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பின்னர், காவல்துறையினர் ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சிறுவனின் உடலை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பூஜாராம் தெரிவிக்கையில், 'மனைவி வீட்டில் இல்லாத நிலையில் அவன் என்ன சாப்பிட்டான் என்று எனக்கு தெரியவில்லை. வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அங்கு அவன் இறந்துவிட்டான். உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளை செய்ய மருத்துவமனை நிர்வாகம் தவறிவிட்டது'. என்றார்.
மொரேனா மருத்துவமனை மருத்துவர் வினோத் குப்தா இது குறித்து தெரிவிக்கையில், சிறுவனின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், ரத்த சோகையும் இருந்தது. சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. உடலை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தோம். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே அவனது தந்தை உடலை வெளியே எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார் எனக் கூறியுள்ளார்.
44 minute ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
28 Jul 2025