2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆழ்துளைக் கிணற்றில் மீண்டும் ஒரு குழந்தையின் கதறல்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய பிரதேசத்தின், பாலி கிராமத்தைச் சேர்ந்த ரினா என்ற 3 வயதான பெண் குழந்தையொன்று நேற்று முன்தினம்(26)   தனது வீட்டுக்கு அருகே  மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்  கிணற்றில்  தவறி விழுந்துள்ளது.

இதைப்பார்த்து அதிச்சியடைந்த அக்குழந்தையின் குடும்பத்தினர் இதுகுறித்து உடனடியாக மீட்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் ,குழந்தையை மீட்கும் பணியைத்  தொடங்கினர்.

இதன்போது சுமார் 30 அடி ஆழத்தில்  அக்குழந்தை சிக்கியிருப்பது  தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அருகில் குழித்தோண்டி குழந்தையைப்  பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .