A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
மதுரையில் பழைய வீட்டை இடித்து புதுப்பிக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது சுவர், மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
600 சதுர அடி பரப்பளவுள்ள மூன்று மாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதுப்பிக்கும் பணிகள் சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கட்டுமானப்பணியில் தொழிலாளர்கள் மதியம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென வீட்டின் வலது பக்க சுவர் இடிந்துவிழுந்ததில் மேற்கூரையும் பெயர்ந்து விழுந்ததால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
உடனடியாக திடீர் நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago