2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’இடியாய் தலையில் இறங்கியது’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 05 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் நகரைச் சேர்ந்தரொருவர் திருமணமாகி, மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

இந்த இளைஞரின் அப்பா ஒரு துப்புரவு தொழிலாளி.

ஆனால், அப்பா அவர் மட்டுமே சம்பாதித்து  தனியாக வாழ்ந்து வந்தார். மகனைக் கவனிப்பதே இல்லையாம்.. அப்பாவின் நடவடிக்கைகள் எல்லாம் மகனுக்கு விநோதமாகவே இருந்து வந்துள்ளன. ஒருநாள், தன்னுடைய அப்பாவைப் பற்றி தகவல் வேண்டுமென மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அலுவலகத்துக்குச் சென்று,  சில தகவல்களையும் சேகரித்தார். அப்போதுதான் அந்த செய்தி இடியாய் இளைஞன் தலையில் இறங்கியது.

அந்த இளைஞனின் மனைவியை, இந்த அப்பாவே கல்யாணம் செய்து கொண்ட தகவல் கிடைத்துள்ளது.  இதை கேட்டு ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த மகன், பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.   

அதாவது, 2016இல் இளைஞர் அந்த பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்துள்ளார்.  அப்போது இளைஞனுக்கும், அந்த பெண்ணுக்கும் 18 வயதும் ஆகவில்லை.. சில நாட்களில் இருவருமே சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். 6 மாதத்தில் பிரிந்து விட்டனர்.  இவர்கள் 2 பேருமே மைனர் என்பதால் முறைப்படி பதிவு செய்யவில்லை . 18 வயது ஆகிவிடவும், ஒருநாள் அந்த இளைஞர், முன்னாள் மனைவியை தேடி சென்றார்.  நாம் இப்போது சேர்ந்து வாழலாம் என்று கூப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்த பெண், கணவனுடன் செல்ல மறுத்துள்ளார்.  நீ ஒரு குடிகாரன், உன்னுடன் வாழ முடியாது என்று சொல்லி உள்ளார். அப்போதுதான் இளைஞனுக்கு விஷயம் தெரிந்தது, தன்னுடைய முன்னாள் மனைவி, இப்போது அப்பாவுக்கே மனைவி ஆகி இருந்தார்.. அதுமட்டுமல்ல, இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறதாம்..

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X