Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 16 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள வெண்கலத்தாலான 9,500 கிலோகிராம் நிறையும் 6.5 மீற்றர் உயரமும் கொண்ட தேசிய சின்னத்தை பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தாா்.
புதிய பாராளுமன்றக் கட்டடம் இந்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்தச் சின்னம் திறந்து வைக்கப்பட்டிருப்பது மிக முக்கிய முதல் நிகழ்வாக அமைந்துள்ளது.
மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டடம், 6.5 மீற்றர் தேசிய சின்னத்துடன், கிட்டத்தட்ட 40 மீற்றர் உயரமாக காணப்படும் அதேவேளை, 42 மீற்றர் உயரமுள்ள இந்தியா கேட்டை விட சற்று குறைவாக இருக்கும்.
ஆரம்ப விளக்கக்காட்சியில், மத்திய விஸ்டா மறு அபிவிருத்தித் திட்டத்தின் தலைமைக் கட்டடக் கலைஞர், திட்டத்தில் உள்ள எந்தக் கட்டடமும் இந்தியா கேட் உயரத்தை தாண்டக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்தியாவின் புதிய பாராளுமன்றத்துக்கு மகுடம் சூட்டும் தேசிய சின்னம் இந்தியா கேட், ராஜ்பாத்தின் கிழக்கு அச்சு முனையில், மத்திய விஸ்டா மற்றும் விஜய் சௌக், சிவப்பு பாரத்பூர் கல்லின் தாழ்வான அடித்தளத்தில் கம்பீரமாகக் காணப்படுகிறது.
அதனைத் தாங்கி நிற்பதற்காக 6,500 கிலோ இரும்பால் ஆன கட்டமைப்பு அமைக்கப்பட்டு, அதன் ஆதரவுடன் தேசிய சின்னம் பொருத்தப்பட்டுள்ளது
புதிய பாராளுமன்றக் கட்டடம் சின்னம் இல்லாமல், 32 மீற்றர் உயரமாகவும் சின்னம் மற்றும் அதன் அடிப்பகுதியுடன், அது 39.6 மீற்றர் வரை காணப்படும் என்று திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வட்டாரம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .