Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா-சீனா எல்லையில், 14,300 அடி மலைச் சிகரத்தில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை இந்திய இராணுவம் நிறுவியுள்ளது.
இந்த சிலையை திறந்து வைத்த இந்திய இராணுவத்தின் 14ஆவது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹித்தேஷ் பல்லா, எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது,
“கிழக்கு லடாக் செக்டாரில் சீனாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) பகுதியில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
“14,300 மலைச் சிகரத்தில், பாங்கோங் ஏரி பகுதியில், இந்திய இராணுவம் அமைத்துள்ள இந்த சிலை சிவாஜியின் வீரம், தொலைநோக்கு பார்வை மற்றும் அசைக்க முடியாத நீதியின் உயர்ந்த சின்னமாக திகழும். மேலும், வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இது விளங்கும்.
“பண்டைய கால சிறப்புகளை சமகால இராணுவ களத்தில் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை இந்திய இராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளிலிருந்து படையை வாபஸ் பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு எல்லையில் இந்த சத்ரபதி சிவாஜி சிலை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago