Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜூன் 21 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா மற்றும் பங்களாதேஷின் எல்லைப் பாதுகாப்புப் படைகள் 4,096 கிலோமீட்டர் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கியமான முடிவை எடுத்துள்ளன, இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் இது இருபுறமும் உள்ள உள்ளூர் மக்களுக்கு உதவும் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்ற நான்கு நாள் எல்லைப் பேச்சுவார்த்தை மாநாட்டின் முடிவில், எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) பங்களாதேஷ் எல்லைக் காவல்படையும் (பிஜிபி) சுதந்திரமாகவும் கூட்டாகவும் செயல்படுவதாகக் கூறியது.
எல்லைகளில் கொலை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பணியாளர்களைத் தாக்குதல் அல்லது மற்ற எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் கடத்தல்காரர்களுடன் தொடர்புபடுத்திய இந்தக் கொலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை, இரு அண்டை நாடுகளுக்கு இடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த கொலைகள் இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள மக்களின் வாழ்க்கையில் ஆழமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த ஐந்து வளர்ச்சித் திட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும், இது முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான கூட்டு முயற்சிகளை மேம்படுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த முடிவு ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான இருதரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வளர்க்க உதவும்" என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஐந்து வளர்ச்சித் திட்டங்களும் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மிசோரம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ஓடும் எல்லையில் பெய்லி பாலம் கட்டுதல், சாலை பழுதுபார்த்தல் மற்றும் தடுப்புச் சுவர்களை வலுப்படுத்துதல் தொடர்பானவையாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .