2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இந்தியா மீது வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம்....

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், முஹமது நபி குறித்து அவதூறான கருத்தை பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, முஹமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் நீக்கி இருந்தார் பா.ஜ.கவின் நவீன் குமார். 

இதனை எதிர்த்து, உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில்,  இஸ்லாமியர்களால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அதனால் அந்தப் பகுதியில், வன்முறை வெடித்தது. இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளின் கடும் கண்டனங்களும் இந்திய அரசை நோக்கி குவிந்தவண்ணமுள்ளன. 

குறிப்பாக, கட்டார், ஓமான், சவுதி அரேபியா, குவைத், ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தன. 

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளார் அரிந்தம் பாக்சி, இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, 'இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறோம்.

இது குறுகிய மனப்பான்மை கொண்ட தேவையற்ற விமர்சனங்கள், இந்திய அரசு எல்லா மதங்களையும் மாண்புடன் அணுகுகிறது.

முஹமது நபிகள் பற்றிய சில அவதூறான ட்வீட்களும், கருத்துகளும் தனி நபர்களால் முன்வைக்கப்பட்டவை.

அவர்கள் நிச்சயமாக தேசத்தின் கருத்தை தெரிவிக்கவில்லை. 

அப்படியிருந்தும், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைமைச் செயலகமானது, உள்நோக்கத்துடன் கூடிய தவறான, விமர்சனங்களை முன்வைக்கிறது.

இது சிலரின் தூண்டுதலின் பேரில் எடுக்கப்படும் பிரிவினை முயற்சி என்றே தோன்றுகிறது. எனவே, எல்லா மதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் அதற்கான மரியாதையை உரித்தாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகஇ நுபுர் சர்மாஇ நவீன்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பா.ஜ.க நீக்கியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .