2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

“இந்தியாவிற்கு தனி ஆய்வு மையம்”

Mithuna   / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார்.

அதனை தொடர்ந்து அவர், செவ்வாய்க்கிழமை (27) இந்த விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் சார்பாக அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்தான்.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டுங்கள். விண்வெளி வீரர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ககன்யான் திட்டத்தில் பயன்படும் கருவிகள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரானவை. விண்வெளித்துறையில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. நிலவில் தென் துருவ பகுதியான சிவசக்தி பாயிண்ட் இந்தியாவின் சக்தியை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்தியாவின் ககன்யான் திட்டம் விண்வெளித்துறையை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லப்போகிறது. சந்திரயான், ககன்யான் போன்ற விண்வெளிப்பயணங்களில் பெண்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.

2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர். 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆய்வு மையம் அமைய உள்ளது.” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .