2025 ஜூலை 24, வியாழக்கிழமை

இந்தியாவில் இருந்து முதலீட்டை எதிர்பார்க்கிறோம்

Freelancer   / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் இருந்து அதிக முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் சபஹர் துறைமுகத்தை செயல்படுத்த தங்களது நாடு எதிர்பார்க்கிறது என்றும் இந்தியாவுக்கான ஈரானிய தூதுவர் இராஜ் இலாஹி தெரிவித்தார்.

இந்தியாவும் ஈரானும் சபாஹரில் பங்குதாரர்களாக உள்ளதாகவும்  இந்தியாவில் இருந்து முதலீடு மற்றும் சபாஹரை செயல்படுத்துவதை எதிர்பார்க்கிறோம் என்றும் ஏஎன்ஐயிடம் தெரிவித்த அவர், 
இந்தியா மற்றும் ஈரான் ஆகியவை வடக்கு-தெற்கு சர்வதேச வழித்தடத்தின் முக்கிய நிறுவனர்கள் மற்றும் பங்காளிகள் என்றார்.

ஈரான், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவை வடக்கு-தெற்கு சர்வதேச வழித்தடத்தின் முக்கிய பங்காளிகள் என்றும் குறிப்பிட்ட ஈரானிய தூதர், இந்தியாவையும் ஈரானையும் இயற்கையான பங்காளிகள் என்று இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேற்கோள் காட்டி அழைத்தார்.

எரிசக்தி ஒரு முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது என்பதுடன், வெளி அழுத்தம் உள்ளது, ஆனால் இந்தியாவின் மூலோபாய சுயாட்சி இந்த ஒத்துழைப்பின் தொடர்ச்சிக்கு இன்னும் பெரிய ஆதரவாக உள்ளது என்று இல்லாஹி குறிப்பிட்டார். 

"ஈரானின் சமகால நாகரீகத்துடன் சிந்து சமவெளி நாகரீகம் தொடர்பு கொண்டிருந்தது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. தெற்கு ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாரசீக வளைகுடா மற்றும் அரேபிய கடல் வழியாக வர்த்தகம் இருந்தது. நமது நாகரீகம் முன்னேறும்போது இந்த இணைப்பு வளர்ந்தது," என்று அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .