A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
இந்தியாவில் எப்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் முடக்கியுள்ளன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பான அடுத்தகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் சீனா, அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும் என்றும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
31 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
07 Mar 2026