2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 25 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூர்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்த அவர், இன்று கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

நமது விவசாயிகள் மீது பிரதமர் தாக்குதல் நடத்துகிறார். இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டங்களை அவர் கொண்டு வந்திருக்கிறார்.

விவசாயத்தை 3 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிரதமர் கொடுத்துவிட்டார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணம் அல்ல, மோடிதான் காரணம் என்று பேசினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .