2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இந்து கடவுள்களை வசைபாடியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரையில் எம்.பி. வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட்இ விடுதலைசிறுத்தைகள்இ திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் சார்பில் நடந்த செஞ்சட்டை பேரணியில்இ இந்து கடவுள்களை அவமதித்து கோஷம் எழுப்பப்பட்டது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்து முன்னணியும் இந்து மக்கள் கட்சியும் அளித்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:   

மதுரையில் மே 29ஆம் திகதி நடந்த செஞ்சட்டை பேரணியில் பங்கேற்றவர்களில் சிலர்,  இந்து சமுதாயத்தையும் இந்து கடவுள்களையும் இழிவான வார்த்தைகளால் வசைபாடி, பாடல்களைப் பாடியும் கோஷமிட்டும் பேரணியில் வந்தனர்.

குறிப்பாக கடவுள் கண்ணனையும், சுவாமி ஐயப்பனையும் இழிவுபடுத்தியதுடன் முருகனுக்கு நேர்த்தி செய்யும் சடங்குகளையும் கொச்சைப்படுத்தினர்.

இப்படி பேசி அமைதியான சமுதாயத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் இழிவாக கோஷமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .