2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இன்ஸ்டாகிராமால் நிகழ்ந்த விபரீதம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் மிஸ்ரா(வயது37). இவர் டூர் மற்றும் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்துள்ளது. குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி பதிவுகள் போட்டு வந்துள்ளார். அவரது பதிவுகளுக்கு அதிக லைக்குகள் மற்றும் பின்தொடர்வோர் அதிகமானோர் உருவாகியுள்ளனர்.  இதனால் அவர் அதிகநேரம் இன்ஸ்டாகிராமில் செலவழித்தார்.

இது ராகுலுக்கு தெரியவந்து. அவரும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தார். தன்னைவிட அதிக பாலோவர்கள் மனைவிக்கு இருக்கிறார்களே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குள் ஏற்பட்டது. மேலும் பின்தொடர்வோரில் சிலர் மனைவியை சந்திப்பதாகவும் சந்தேகப்பட்டார்.

 இந் நிலையில் சம்பவத்தன்று ராகுல் தனது மனைவி, குழந்தைகளுடன் ரேபரேலிக்கு காரில் சென்று, பூர்வாஞ்சல் சாலையில் முஜ்ஏஸ் சதுக்கம் அருகே வந்தபோது காரை ஓரமாக நிறுத்தி,ஆவேசமாக தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X