2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இப்படியா சிக்குவது? இளைஞரின் திக்.. திக்... நிமிடங்கள்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் செகந்திராபாத் அருகே அண்மையில்  இளைஞர் ஒருவர் இரு பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவ தினத்தன்று செகந்திராபாத் அருகே உள்ள திருமலகிரி மலை மீது நடந்து சென்ற ராஜு என்ற குறித்த இளைஞர் எதிர்பாராத விதமாக மலையில் இருந்து கால் தவறி விழுந்துள்ளார்.

 இதில் இரு பாறைகளுக்கு நடுவில் ராஜு  சிக்கிக் கொண்ணடார். இந்நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாறை இடுக்கில் சிக்கி கொண்டிருந்த இளைஞருக்கு தண்ணீர், உணவு ஆகியவற்றை கொடுத்த பின்னர் பத்திரமாக வெளியில் இழுத்து மீட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .