2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இப்படியும் நடக்கிறது

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆசிரியர்  பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு சச்சின் டெண்டுல்கர் மகன் மகேந்திர சிங் தோனி என்ற நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் பணிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. இதற்காக, 'ஒன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டன. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு சமீபத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் பெற்ற, 15 பேருக்கு, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

இதில், ஒருவர் மட்டும் பங்கேற்கவில்லை. விண்ணப்பத்தில் அவரது பெயர், மகேந்திர சிங் தோனி என்றும், தந்தையின் பெயர் சச்சின் டெண்டுல்கர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு, 98 மதிப்பெண்கள் கிடைத்திருந்தது.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட பிறகு தான், யாரோ பொய் பெயரில் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் கெப்டன்கள் பெயரில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலித்து, நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X