2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இரவு உணவுக்காக திட்டிய கணவர்; கொடூர கொலை செய்த மனைவி

Freelancer   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமலூரைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே, இரவு உணவு தொடர்பான வாக்குவாதம் எழுந்ததையடுத்து, உறங்கிக் கொண்டிருந்த கணவரைக் கொடூரக் கொலை செய்த மனைவியை ஓமலூர் பொலிஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் - பூங்கொடி தம்பதியினர்.

இந்நிலையில், கடந்த 21ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவர் செல்வத்தின் கழுத்தை அறுத்து பூங்கொடி கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணையில், வேலை முடிந்து வீட்டிற்கு வந்த செல்வம், சாப்பாடு இருக்கிறதா என்று மனைவி பூங்கொடியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து சமையல் செய்யவில்லை என்பதால் தம்பதியினர் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து செல்வம், நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பொழுது, நள்ளிரவு நேரத்தில் எழுந்த பூங்கொடி, கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பூங்கொடியை கைது செய்த பொலிஸார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X