2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இராட்சத கிரேன் விழுந்ததில் 17 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருத்தி பகுதியில் விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தபோது இராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. விரைவுச்சாலை அமைக்கும் மூன்றாம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் நள்ளிரவு பணி நடைபெற்று இருக்கும்போது 12 மணியளவில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் திடீரென சரிந்து அங்கு பணியில் ஈடுப்பட்டு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில், இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தெரிவித்துள்ளது.

அதில் இருவர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு இந்திய மதிப்பில்  தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதேசமயம் இறந்தவர்களின்  குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மராட்டிய மாநில அரசும் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X