2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரு முறை உறவுக்கு மறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்

Editorial   / 2022 டிசெம்பர் 11 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (வயது 34). அன்வரின் மனைவி ருக்‌ஷர் (வயது 30). 9 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2013ம் ஆண்டு திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில்,  திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவியுடன்  பாலியல் உறவு கொண்டுள்ளார். உறவுக்கு பின்னர் ருக்‌ஷர் உறங்கியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் உறவுக்கு வருமாறு ருக்‌ஷரை அன்வர் அழைத்துள்ளார். அதற்கு ருக்‌ஷர் முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அன்வர் தனது மனைவி ருக்‌ஷரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். உடலை வீட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலையில் வீசியுள்ளார்.

பின்னர், காலை தனது மனைவியை காணவில்லையென புகார் அளித்துள்ளார். விசாரணையின் போது பொலிஸாரிடம் வசமாகக் சிக்கிக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .