Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 31 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி தேயிலை தோட்ட பகுதிக்கு தாய் யானை ஒன்று, உயிரிழந்த குட்டியை தும்பிக்கையில் சுமந்தபடி வௌ்ளிக்கிழமை (27) வந்தது. அந்த தாய் யானையை சுமார் 30 காட்டு யானைகள் பின்தொடர்ந்தன.
கண்களில் நீர்வழிந்தபடி உயிரிழந்த குட்டியை தும்பிக்கையில் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு தேயிலை தோட்டமாக தாய் யானை சுற்றித் திரிந்தது. கடந்த இரு நாட்களாக சுமார் 7 கிலோமீற்றர் தொலைவுக்கு அங்கும்இ இங்கும் பிளிறியபடி ஓடியது.
மாநில வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தாயிடம் இருந்து உயிரிழந்த குட்டியை பிரிக்க முயற்சி செய்தனர். ஆனால் தாய் யானை, குட்டியை விட்டு விலக மறுத்துவிட்டது. அதோடு 30 யானைகளும் சுற்றித் திரிந்ததால் வனத்துறை அலுவலர்களால் உயிரிழந்த குட்டியை மீட்க முடியவில்லை. இரு நாட்களாக தேயிலை தோட்டங்களில் குட்டியை தூக்கியபடி சுற்றித் திரிந்த தாய் யானை காட்டுக்குள் சென்றது.
வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, 'மனிதர்களை போன்று யானைகளும் தங்கள் குட்டிகள் மீது அதிகம் பாசம் கொண்டிருக்கின்றன. குட்டி யானை எப்படி உயிரிழந்தது என்பது தெரியவில்லை. ஆனால் தாய் யானையின் தவிப்பு எங்களை கண்ணீர்மல்க செய்துவிட்டது' என்று தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .