2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இறந்த மகனின் உடலை இப்படியா கொண்டு செல்வது?

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 28 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறந்த மகனின் உடலை தந்தையொருவர் 90 கிலோ மீற்றர் தூரம் வரை  மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற  சம்பவம் ஆந்திராவில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஆந்திர மாநிலம், ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது 10 வயது மகனான ஜெசேவா வுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்ததால்  திருப்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். 

இந்நிலையில் நேற்று அதிகாலை (27) ஜெசேவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.  இதனையடுத்து  நரசிம்மலு, மகனின்  உடலை வைத்தியசாலையில் இருந்து தனது சொந்த ஊருக்குக்  கொண்டு செல்ல தனியார் அம்பூலன்சை அணுகியுள்ளார்.

எனினும் அவர்கள் அதிகளவு பணம் கேட்டதால், வறுமையில் வாடும்  நரசிம்மலு ஆத்திரமடைந்து, தனது மகனின் உடலை, உறவினர் ஒருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு  சென்றுள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .