Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 31 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நிருபர்
ராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் தப்பியோடியுள்ளார்.
அதாவது, பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ மதிப்புள்ள கடல் அட்டைகளை, வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
இதன்போது, பட்டணம் காத்தான் புறவழிச்சாலை பகுதியில் கேணிக்கரை காவல்துறையினர் இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், ஒருவர் தப்பி ஓடினார்.
மற்றொருவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால், விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .